உத்திர ரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ உத்திர ரங்கநாதர் திருக்கோவிலில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.;

Update: 2025-09-20 14:43 GMT
வேலூர், பள்ளிகொண்டா பாலாற்றங்கரை அருகே அமைந்துள்ள ஸ்ரீ உத்திர ரங்கநாதர் திருக்கோவிலில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று (செப். 20) சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ உத்திர ரங்கநாதருக்குப் பல்வேறு வகையான அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News