தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்ற நெல்லை
உறுப்பு தானத்தில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதலிடம்;
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே உறுப்பு தானத்தில் முதல் இடம் பெற்றமைக்காக மாவட்ட ஆட்சியர் சுகுமார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் மற்றும் மருத்துவ பணியாளர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.இதில் அதிகாரிகள், அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.