கோவை நஞ்சுண்டாபுரத்தில் காட்டு பன்றியின் அட்டகாசம் – மக்கள் அச்சம் !

இரவு நேரங்களில் வீடுகள், தோட்டங்களில் காட்டு பன்றிகளால் அச்சம்.;

Update: 2025-10-04 06:22 GMT
கோவை நஞ்சுண்டாபுரம் பஸ் ஸ்டாண்ட், சின்னதம்மன் தோட்டம், டாடா நகர் பகுதிகளில் காட்டு பன்றிகள் கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்து வருகின்றன. இரவு நேரங்களில் வீடுகளின் அருகே உணவுப் பொருட்கள் தேடி வருவதோடு, குப்பை தொட்டிகளை சிதறடித்து அச்சுறுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதனால் சிறுவர்கள், பெண்கள் இரவில் வெளியே செல்ல அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தோட்டப் பகுதிகளில் சுற்றித்திரிவதால் பயிர்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனையைத் தடுக்கும் வகையில் நகராட்சி மற்றும் காட்டு விலங்கு பாதுகாப்புத் துறையினர் இணைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News