கோவை: காரை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு !
வால்பாறை அருகே சுற்றுலா பயணிகள் காரை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு.;
கோவை, வால்பாறை அருகே அதிரப்பள்ளி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் காரை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தின. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வனப்பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அங்கமாலி பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கார் பழுதாகி சாலையோரம் நிறுத்தி வைக்க, ஐந்து யானைகள் கூட்டமாக வந்து காரை தலைகீழாக புரட்டி உடைத்து சேதப்படுத்தின. வனத்துறையினர் உடனடியாக வந்து யானைகளை விரட்டி வாகனத்தை எடுத்துச் சென்றனர். வனப்பகுதியில் வாகனங்களை விட்டுச் செல்ல வேண்டாம் எனவும், எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் எனவும் வனத்துறை சுற்றுலா பயணிகளை எச்சரித்துள்ளது.