கோவையில் வடமாநில மக்களால் துர்கா பூஜை கொண்டாட்டம் !
விஜயதசமி முன்னிட்டு கோவையில் துர்கா பூஜை விழா கோலாகலம்.;
கோவை பீளமேடு பகுதியில், உத்தரபிரதேச மாநில மக்கள் கூட்டமைப்பு மற்றும் ஜன்ஹித் சேவா சன்ஸ்தான் அமைப்பு சார்பில் துர்கா பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. விஜயதசமி தினத்தையொட்டி நடைபெற்ற இவ்விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று துர்கா தேவிக்கு தீபமேற்றி வழிபட்டனர். பஜனை, கீர்த்தனைகள், போஜ்புரி நடனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வண்ணமிகு உடையில் பெண்கள் ஆடிய நடனங்கள் அனைவரையும் கவர்ந்தன.