கோவை: கார் மீது மரம் சாய்ந்து விபத்து !
மழை பெய்த போது வீசிய காற்றில் மரம் சாய்ந்து கார் மீது விழுந்து விபத்து.;
கோவையைச் சேர்ந்த பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம், குப்பிச்சிபாளையம், ஜோதிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மாலை அரை மணி நேரம் கனமழை பெய்து சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ந்த காற்றுடன் பெய்த மழை வெப்பத்தை தணித்து, மக்கள் மகிழ்ச்சியை பெற்றனர். இதையடுத்து, கோவை மாநகராட்சியின் 69-வது வார்டு சாய்பாபா காலனி, பாரதிபார்க் 4-வது குறுக்கு ரோட்டில் உள்ள சிறுவர் பூங்கா அருகே பல நாட்கள் காய்ந்திருந்த மரம், பலத்த காற்றில் முறிந்து, கீழே நிறுத்தப்பட்ட காரில் விழுந்தது. விபத்தில் கார் சேதம் ஏற்பட்டது; ஆனால் யாரும் பாதிக்கப்படவில்லை.