கோவை: நடிகர் விமல் நடித்த வடம் படம் படப்பிடிப்பு நிறைவு !
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் வடம் படப்பிடிப்பு நிறைவற்றது.;
கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ‘வடம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் விமல், நடிகை சங்கீதா, இயக்குனர் கேந்திரன், தயாரிப்பாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் விமல் நிருபர்களிடம் கூறுகையில், “பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை நிறைவு செய்தோம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இதில் சோழன் என்ற மாடு முக்கியமாக வரும். அடுத்ததாக சிம்பு தேவன் இயக்கத்தில் பெயரிடாத படம் மற்றும் ஏழாம் பொருத்தம் படத்தில் நடிக்க உள்ளேன்” என தெரிவித்தார்.