அட்டப்பாடி பவானி ஆற்றில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை – இரு மாநில வனத்துறையினர் கண்காணிப்பு
காயமடைந்த யானை மீட்பு பணியில் இரு மாநில வனத்துறை இணைந்து கண்காணிப்பு.;
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே பவானி – சிறுவாணி நதிகள் சங்கமிக்கும் கூடப்பட்டி பகுதியில் கடந்த 5 நாட்களாக காயமடைந்த நிலையில் காட்டு யானை தஞ்சமடைந்திருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தமிழ்நாடு–கேரள வன எல்லை பகுதியாக இருந்ததால், இரு மாநில வனத்துறை அதிகாரிகள் இணைந்து யானையை கண்காணித்தனர். ஆய்வில் யானையின் கால்கள், முதுகு மற்றும் காதின் அருகே படுகாயங்கள் இருப்பது தெரியவந்தது. மற்றொரு யானையுடன் மோதியதில் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வனத்துறையினர் கரும்பு, பழம், வாழைத்தண்டு உள்ளிட்ட உணவுகளுடன் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை வழங்கி சிகிச்சை அளித்தனர். பின்னர் யானை நதியிலிருந்து கரைக்கு ஏறி தமிழ்நாடு வனப்பகுதிக்குள் நகர்ந்தது. தற்போது தமிழ்நாடு வனத்துறையின் விரைவு மீட்பு அணி (RRT) ட்ரோன் மூலம் அதன் அசைவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.