கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை கைவிட கோரிக்கை – விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் !
கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.;
கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என கோவையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் துவங்கி மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள மத்தம்பாளையத்தில் முடியும் இந்த திட்டம், சுமார் 1200 ஏக்கர் விவசாய நிலங்களை பாதிக்கும் என கூறப்படுகிறது. அன்னூர் கிட்டாம்பாளையத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று, திட்டம் கிராம சாலைகள் வழியாக மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இப்போராட்டத்திற்கு கோவை அதிமுக எம்எல்ஏக்கள் கந்தசாமி, பி.ஆர்.ஜி. அருண்குமார், மேலும் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.