தலைப்பு: விஜய்யை அரசியலில் இறக்கி சிக்க வைத்தது பாஜகவும் ஆர்எஸ்எஸும் தான் – அதியமான் குற்றச்சாட்டு !

Update: 2025-10-06 11:16 GMT
பாஜகவும் ஆர்எஸ்எஸும் தான் விஜய்யை அரசியலில் இறக்கி சிக்க வைத்துள்ளதாக ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் தெரிவித்துள்ளார். கோவை சிந்தாமணியில் நடைபெற்ற பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், உச்சநீதிமன்றம் வழங்கிய 18% உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கரூர் தவெக பிரச்சாரக் கூட்டம் சம்பவம் குறித்து அவர், முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்தது பாராட்டத்தக்கது என்றார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு விஜய் ஒரு கோடி ரூபாயும் வீடும் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

Similar News