கோவை ஆட்டோ ஓட்டுநர்கள் அரசு நிதி உதவி கோரி மனு !

மீட்டர் கட்டண உயர்வு, ஆன்லைன் வாடகை வாகனங்களில் பாதிப்பு குறித்து நடவடிக்கை கோரி மனு.;

Update: 2025-10-07 06:18 GMT
அரசு நிதி உதவி வழங்கிட கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று மனு அளித்தனர். தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றப்படாததால், அதை உயர்த்தவும், ஆன்லைன் வாடகை வாகனங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் நிவாரணம் வழங்கவும் கோரினர். ஆந்திர அரசு ஆண்டுக்கு ரூ.15,000 நிதி உதவி வழங்கும் மாதிரியாக, தமிழக அரசும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என இந்திய ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் இந்த கோரிக்கையை தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Similar News