கோவை: ஆழியாறு பாசனத் திட்டம் - விவசாயிகள் பேரணி !

ஆனைமலையாறு – நல்லாறு நீர்ப்பாசனத் திட்டம் விரைவில் நிறைவேற்ற கோரி காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் போராட்டம்.;

Update: 2025-10-07 09:16 GMT
கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட விழாவை ஒட்டி, ஆனைமலையாறு – நல்லாறு நீர்ப்பாசனத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றவும், பாசனக் கால்வாய்களைச் சீரமைக்கவும் கோரி காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு சார்பில் விவசாயிகள் இன்று பேரணி நடத்தினர். காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் மோகன் செல்லக்குமார் தலைமையில் செஞ்சேரி முதல் செஞ்சேரிமலை வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பேரணி நடைபெற்றது. ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை உடனே தொடங்க வேண்டும், பாசனக் கால்வாய்களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வி.எம்.சி. மனோகர் வலியுறுத்தினார். நிகழ்வில் சௌந்தர்ராஜன், சிவக்குமார், துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News