அன்னூர் : சாலை விபத்து இழப்பீட்டுத் தொகையில் கமிஷன் வாங்கிய விவகாரம் – பா.ஜ. நிர்வாகி உட்பட மூவர் கைது

Update: 2025-10-07 09:41 GMT
கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி நாகராஜின் மகன் திருமூர்த்தி, 2023 ஜூலை மாதம் லாரி மோதி உயிரிழந்தார். திருமூர்த்தி 50 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்திருந்தார். அந்த தொகையைப் பெற உதவுவதாக கூறி, கோகுலகண்ணன், பா.ஜ. கோவை வடக்கு மாவட்ட செயலர் ராஜராஜசாமி, ராஜேஷ் ஆகியோர் நாகராஜிடம் 10 லட்சம் ரூபாய் கமிஷனாக மிரட்டி பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையில் குற்றம் உறுதியானதைத் தொடர்ந்து மூவரையும் கைது செய்தனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட ராஜராஜசாமி, வடக்கு மாவட்ட செயலர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பா.ஜ. கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து அறிவித்துள்ளார்.

Similar News