காட்பாடி சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு!!
காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தை இன்று அமைச்சர்கள் துரைமுருகன், பி.மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.;
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரூ.1.87 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தை இன்று (அக்.7). அமைச்சர்கள் துரைமுருகன், பி.மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், மேயர் சுஜாதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.