கொட்டாம்பட்டியில் கல்லூரி மாணவி மாயம்.

மதுரை மேலூர் கொட்டாம்பட்டி அருகே கல்லூரி மாணவி மாயமான புகார் அளிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-10-18 05:08 GMT
மதுரை கொட்டாம்பட்டி அருகே உள்ள பொட்டபட்டியை சேர்ந்த செல்வத்தின் மகள் வினோதினி( 19) என்பவர் மேலூர் அரசு கலைக் கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி காலை வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (அக்.17) மாலை இவரது தாயார் வைரம் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Similar News