பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண்மணி பலி.

மதுரை அருகே பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2025-10-18 05:12 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த ஜெயா (53) என்பவர் கடந்த அக்.14ல் மன்னாடி மங்கலம் செல்லும் அரசு பேருந்தில் சென்றார். பேருந்து நிறுத்தத்தில் இறங்க தயாராக படியின் அருகே நின்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக விநாயகபுரம் காலனி அருகே கீழே விழுந்து காயமடைந்தவர் மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (அக்.17) உயிரிழந்தார்.

Similar News