திருப்பரங்குன்றம் கோவிலில் தீபாவளியன்று தங்குவதற்கு அனுமதி மறுப்பு.
மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபாவளியன்று கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது;
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் 22 முதல் 28 வரை நடைபெற உள்ளது. இத்திருக்கோயில் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி வரும் 20 ஆம் தேதி தீபாவளிப்பண்டிகை அன்று பக்தர்கள் இத்திருக்கோயிலில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. கோவிலினுள் தங்கி விரதமிருக்க வருகைபுரியும் பக்தர்கள் வரும் 21 ஆம் தேதி இரவு முதல் கோயிலில் தங்கி விரதமிருக்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.