மாணவ மாணவிகளுக்கு பனை விதை வழங்கல்

குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பனை விதை வழங்கப்பட்டது.;

Update: 2025-10-23 13:38 GMT
தமிழ்நாடு அரசின் ஆறு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம், நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பாக குமாரபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக பனை விதை நடும் நடும் பணிக்காக குமாரபாளையம் புத்தர்தெரு நகராட்சி ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி வசம் 200-க்கும் மேற்பட்ட பனை விதைகளை அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் வழங்கப்பட்டது. பனை விதைகளை நடவு செய்தால் மட்டும் போதும் தொடர்ந்து நீர் ஊற்றி பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், மேலும் பனை விதையின் வளர்ச்சி மற்றும் பனை விதைகளை எங்கெல்லாம் நடலாம், உதவி செயலியில் பதிவு செய்து தமிழ்நாடு அரசு வழங்கும் சான்றிதழ் பெறுவது குறித்தும், தளிர்விடும் பாரதம் சரண்யாபிரபு விரிவாக பள்ளி மாணவ மாணவியரிடையே எடுத்துரைத்தார். மாணவ-மாணவிகள் தீபாவளியில் வெடி வைத்த நம் கையால் பனை விதை வைப்போம் என்றும் பனை விதை நடுவோம், நீர்வளம் காப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் சித்ரா பாபு, ரேவதி, இந்துமதி, ஆசிரியர்கள் பாலமுருகன், விசாலாட்சி உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News