வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை

மதுரை மேலூரில் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது;

Update: 2025-10-25 13:51 GMT
மதுரை மேலூர் அருகே தும்பைபட்டி வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி பாண்டியம்மாள் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். தினமும் இரவில் அருகில் உள்ள தனது தாயாரை விட்டு தங்கி விட்டு மறுநாள் காலை வீடு திரும்பும் போது வழக்கம். நேற்று (அக்.24) காலை பாண்டியம்மாள் வீடு திரும்பும் போது வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு சாவியை பயன்படுத்தி பீரோவிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News