திருப்பரங்குன்றத்தில் வேல் வாங்கும் விழா
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வேல் வாங்கும் விழா நடைபெற்றது;
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ( அக்.26) இரவு கோவிலுக்குள் ஆலய பணியாளர்கள் திருக்கண் மண்டபத்தில் கோவர்த்தன அம்பிகையிடம் இருந்து முருகன் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரபத்மனை வெல்லுவதற்காக சத்திய கிரிஸ்வரர் முன்னிலையில் முருகப் பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் சக்திவேல் பெறும் நிகழ்ச்சியாக "வேல் வாங்குதல் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.