பேரூராட்சி புதிய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த பேரூராட்சி இயக்குனர்
மதுரை வாடிப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவலக கட்டிடப் பணிகளை பேரூராட்சி இயக்குனர் ஆய்வு செய்தார்;
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டிடம் புதிதாக ரூ.1 கோடி 9 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. அதேபோல், போடிநாயக்கன்பட்டி யில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் கட்டுமான பணியும் நடந்து வருகிறது. இந்த இரண்டு பணிகளையும், பேரூராட்சிகளின் இயக்குனர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி, பேரூராட்சித் தலைவர் மு. பால்பாண்டியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.