தெரு நாய்களின் தொல்லையால் வணிகர்கள், பொதுமக்கள் அச்சம்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் தெரு நாய்களின் தொல்லையால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்;
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் எதிரில், உள்ள தனியார் மொபைல் நிறுவனத்தில் நுழைந்த ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் நிறுவனத்தின் உள்ளே நுழைந்து ஹாயாக படுத்து கொள்வதும் ,உறங்குவதும் சண்டையிட்டும் , டேபிள் மீது ஏறி அமர்வதும் அங்குள்ள பொருட்களை எடுத்து வீசுவதும் கடைவீதி பகுதியில் வரும் பொது மக்களை ஆபத்தான முறையில் குறைத்து துரத்துவதுமாக பொதுமக்கள் அச்சப்படும் வகையில் ஈடுபட்டு வருகிறது.