பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை.

மதுரை வாடிப்பட்டி அருகே பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்;

Update: 2025-10-27 01:11 GMT
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பசும்பொன் நகரைச் சேர்ந்த கோபிகா (16) என்பவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்தார். இவரது பெற்றோர் அருணா தேவி, நாகரத்தினம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தனர். இவரது அண்ணன் லிங்கேஸ்வரன் (19) மதுரையில் உள்ள கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரையும் தாய்மாமன் முத்துப்பாண்டி என்பவர் பராமரித்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோபிகா நேற்று முன்தினம் (அக்.25) தோட்டத்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை கொண்டார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News