பேருந்தில் பயணம் செய்த தாசில்தார் மரணம்
மதுரை அருகே பேருந்தில் பயணம் செய்த தாசில்தார் மரணம் அடைந்தார்;
மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50) மதுரை வடக்கு தாசில்தாராக பணியாற்றிய பின்னர் தற்போது மதுரை வடக்கு மாவட்ட டாஸ்மாக் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். இவர் நேற்று (அக்.26)மதியம் மதுரையிலிருந்து பேரையூருக்கு பேருந்தில் வந்தார். கூட்டமாக இருந்ததால் பேருந்தில் நின்று கொண்டு வந்துள்ளார். பேருந்து டி.கல்லுப்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை அருகே வந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.