டூவீலர் கவிழ்ந்து சிறுவன் பலி.
மதுரை மேலூர் தும்பைபட்டி பகுதியில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்தார்.;
மதுரை மாவட்டம் மேலவளவு எட்டி மங்கலம் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த பாண்டி செல்வத்தின் மகன் தனுஷ் (17) என்பவர் மேலவளவு மேலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் தண்ணீர் கேன் வைத்து ஓட்டி சென்னகாரன்பட்டி சப்பானிகருப்பன் கோவில் அருகே சென்றபோது தண்ணீர் கேன் நழுவி கீழே விழுந்தது போது வண்டியுடன் சேர்ந்து சிறுவன் தனுஷூம் கீழே விழுந்தார். இதில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.