ரஜினிக்கு கோவில் கட்டிய ரசிகர்
மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினிகாந்திற்கு ரசிகர் கோவில் கட்டியுள்ளார்.;
மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் சரவணன் என்பவர் கிரிவலப் பாதையில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். வீட்டின் முன் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் மார்பளவு சிலை வைத்து கோவில் கட்டி வருகிறார். வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவனம் என்று பெயரிட்டுள்ளார். வீடு திறப்பு விழாவிற்கு ரஜினியின் சகோதரரை அழைத்துள்ளார். இவர் திருப்பரங்குன்றம் நகர் ரஜினி ரசிகர் மற்ற செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது