கொல்லிமலை வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நடத்திய சிறப்பு பயிற்சி முகாம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இணைப்பு சங்கமான கொல்லிமலை அனைத்து வணிகர் நலச்சங்கம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்றது.;
கொல்லிமலை அனைத்து வணிகர் நலச்சங்கத்தின் தலைவர் வருணன் தலைமை தாங்கினார். முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயலாளர் பூபதி வரவேற்புரை நிகழ்த்தினார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயிற்சி முகாமினை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். உணவு பாதுகாப்பு துறையின் சட்டங்களை புரிந்துகொண்டு பாதுகாப்புடன் வணிகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அனைத்து வணிகர்களும் வருகிற நவம்பர் 30ம் தேதிக்குள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணமில்லாமல் உறுப்பினர்களாக இணைந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.சங்கத்தில் புதிதாக இணைந்த வணிகர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா FOSTAC சான்றிதழ் பெறுவதன் அவசியம் குறித்தும், உணவு பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார்.நிகழ்ச்சியில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், துணை தலைவர் தேவி உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராயல் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பொருளாளர் தென்னவன் நன்றி கூறினார்.