துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெட்ற பொதுமக்களுக்கு இனிப்பு வழக்கும் நிகழ்ச்சி.

இராசிபுரம் நகர திமுக மாணவரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஷ்குமார் அவர்களின் ஆலோசனை படி ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆணைப்படி இராசிபுரம் நகர திமுக செயலாளர் சங்கர் தலைமையில்;

Update: 2025-11-27 11:45 GMT

 நாமக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்தியசீலன் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் சி.மணிகண்டன் மற்றும் சி.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு, அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் கோனேரிப்பட்டி ஊர் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இராசிபுரம் நகர மாணவர் அணி அமைப்பாளர் சகாதேவன் மற்றும் துணை அமைப்பாளர்கள் ச.ஆனந்தபாபு, அஜித்குமார், சௌந்தர் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.மேலும் இந்நிகழ்வில் 27வது வார்டு திமுக செயலாளர் கந்தசாமி, 25வது வார்டு திமுக செயலாளர் பாலு, 4வது வார்டு திமுக செயலாளர் தங்கதுரை, 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ஆனந்த், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் கீதா இராசிபுரம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் யோகராஜா மற்றும் கழக வார்டு பிரதிநிதிகள் சார்பு அணி நிர்வாகிகள் கழக மூத்த முன்னோடிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..

Similar News