கல்லூரிக்கு சென்று மாயமான இரு மாணவிகளை நாமக்கல் போலீசார் திருச்சியில் மீட்டனர்.
குடும்ப பிரச்சினை காரணமான சென்றதாக மாணவிகள் கூறியதாக நாமக்கல் போலீசார் தகவல்;
நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கல்லூரியில் திருச்சி மாவட்டம் கல்லூர்பட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் முத்துபிரதிஷா ( வயது 18), இதேப்போல நாமக்கல் அருகே விட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த சேகர் என்பவரது மகள் நந்தினி (வயது 19) ஆகிய இருவரும் பி.ஏ.தமிழ் 2 ம் ஆண்டு படித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2 ம் தேதி செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றுள்ளனர். கல்லூரிக்கு சென்ற நந்தினி, முத்துபிரதிஷா ஆகிய இருவரும் கல்லூரியில் இருந்து வீடு திரும்ப வில்லை என தெரிகிறது.இதனையடுத்து பெற்றோர்கள் இரு மாணவிகள் குறித்து பல்வேறு இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்காததால் நாமக்கல் காவல் நிலையத்தில் மாயமான இருவரையும் மீட்டுத்தரக்கோரி பெற்றோர்கள் புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் கல்லூரி சென்ற இரு மாணவிகள் மாயமானது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருச்சியில் புதிய பேருந்து நிலையில் மாயமான மாணவிகள் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் நாமக்கல் போலீசார் மீட்டு நாமக்கல்லுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக நந்தினியை அவரது சகோதரர் அடித்ததாகவும் இதனால் மனமுடைந்த நந்தினி தனது தோழியான முத்துபிரதிஷாவை அழைத்து கொண்டு திருச்சிக்கு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனையடுத்து இருமாணவிக்களுக்கும், பெற்றோர்களுக்கும் போலீசார் ஆலோசனைகளை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.