நவோதயா பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

நவோதயா அகாடமி பள்ளி மாணவ, மாணவியர்கள் நாமக்கல்லில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர்.;

Update: 2025-12-08 13:31 GMT

முட்டை மற்றும் லாரி போக்குவரத்து அசோசியேசன் மற்றும் நாதன் செஸ் அகாடமி” இணைந்து நாமக்கல்லில் டிசம்பர் 7ஆம் தேதியன்று வேலூர் கந்தசாமி கண்டர் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டியை நடத்தினார்கள். அதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் படிக்கும் செல்வி; என். எஸ். தக்ஷனா (நான்காம் வகுப்பு) செல்வன் ஜீ தர்ஷிக் (ஆறாம் வகுப்பு) செல்வி ஹனுமித்ரா (ஐந்தாம் வகுப்பு) செல்வன் எஸ். ஜி. இனியன் (1ஆம் வகுப்பு) செல்வன் தமிழினியன் (5ஆம் வகுப்பு ) ஆகியோர் கலந்துகொண்டு காண்போர் வியக்கும் வகையில் விளையாடி பல்வேறு பிரிவுகளில் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர். 08.12.2025 அன்று பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக்கூட்டத்;தில் பள்ளியின் பொருளாளர் திரு. கா. தேனருவி அவர்கள் அனைவருக்கும் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கியும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். பல்வேறு இடங்களில் போட்டிகள் நடந்தாலும் அனைத்து இடங்களுக்கும் தன்னம்பிக்கையோடு குழந்தைகளை அழைத்துசென்று போட்டியில் கலந்துகொள்ள ஒத்துழைப்பு வழங்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.மேலும் பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியர்கள், சகமாணவ, மாணவிகள், பணியாளர்கள் அனைவரும் பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறி பாராட்டினார்கள்.

Similar News