வழிப்பாதை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஒப்படைக்க வந்தவர்கள் திடீரென தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.
யார் குறையை தீர்க்க கூட்டம் நடத்துறீங்க.பணம், அதிகாரம், அரசியல் பலம் படைத்தவங்களுக்கு குறைத்தீர்க்க கூட்டம் நடத்துவதற்கு எதற்கு குறைத்தீர்க்கும் கூட்டம் நடத்துறீங்க... பெண் ஆவேசம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி அருகே கள்ளவழிக்கரடு கிராமத்தில் 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தி வந்த வழிப்பாதையை அந்த பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த அலுவர்களும் நடவடிக்கை எடுக்காததால் கள்ளவழிக்கரடு பகுதியை சேர்ந்த புவனேஷ்வரி உட்பட பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்க முயற்சி செய்தனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் மனுவை பெற்று கொண்டு பெண்ணை ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பெண் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டரங்கு முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அந்த பெண் ஆவேசமாக பேசினார், அதில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்க வில்லை, அத்தனை அதிகாரிகளும் தவறு செய்துள்ளனர் அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது. இன்ஸ்பெக்டர் கட்டபஞ்சாயத்து செய்கிறார். குறைத்தீர்க்கும் கூட்டம், குறைத்தீர்க்கும் கூட்டம் என சொல்லுறீங்க.. யார் குறையை தீர்க்க கூட்டம் நடத்துறீங்க... பணம் பலம், அதிகார பலம், அரசியல் பலம் படைத்தவங்களுக்கு குறைத்தீர்க்க கூட்டம் நடத்துவதற்கு எதற்கு குறைத்தீர்க்கும் கூட்டம் நடத்துறீங்க... அதற்கு நீங்க தனியாக கூட்டம் நடங்க என ஆவேசமாக பேசினார் இந்த பிரச்சினைக்கு எல்லாம் டி.ஆர்.ஓ சரவணண் தான் காரணம் என பேசினார்.வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கு முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது