தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நான்கு தொகுப்பு சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் பூங்கா சாலையில் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நான்கு தொகுப்பு சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-12-08 14:17 GMT

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் நீலவானத்து நிலவன் தலைமை வகித்தனர் இதில் 100 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் ஆளை மூடலுக்கு அனுமதி என்பது இனிமேல் 300 தொழிலாளர்களுக்கு மேல் என மாற்றப்பட்டுள்ளது தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமை கூட்டுப்பேர உரிமை வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் 4 தொகுப்பு சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Similar News