கரூர்-நாட்காட்டிகளை வழங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.

கரூர்-நாட்காட்டிகளை வழங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.;

Update: 2025-12-22 13:40 GMT
கரூர்-நாட்காட்டிகளை வழங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் வியூகங்களை அமைத்து வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர். இதனடிப்படையில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-47 ல் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்தார். முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி, கரூர் சட்ட மன்ற தொகுதி, கரூர் தெற்கு பகுதி, வார்டு எண் - 47 க்கு உட்பட்ட இடைச்சிகிணத்தூர், முத்துக்கவுண்டன் புதூர், கரட்டுப்பாளையம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு அதிமுக ஆட்சியில் செய்த  சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் அச்சடிக்கப்பட்ட 2026 தினசரி காலண்டரையும் வழங்கி, 2026 சட்ட மன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிக்க கூறி வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி வாக்கு சேகரித்தனர்.

Similar News