குளித்தலை அன்னை நாமகிரி மழலையர் தொடக்கப்பள்ளி வெள்ளி விழா
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது;
அன்னை நாமகிரி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வெள்ளி விழாவை முன்னிட்டு, குளித்தலையில் இன்று பிரம்மாண்டமான முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள் பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 2015–2016 மாணவர்கள் பத்ரிநாத், சூர்யா, சித்தார்த் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினர். தீக்ஷிதா வரவேற்புரை வழங்க, வருண் தலைமை உரையாற்றினார். தாளாளர் கஸ்தூரி ரெங்கன் மற்றும் அறங்காவலர் உஷா கஸ்தூரி ரெங்கன் சிறப்புரையாற்றினர். அறங்காவலர் விஜய ராகவன் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கு நினைவுப் பரிசும், ஆசிரியர்களுக்கு மரியாதை பரிசுகளும் வழங்கப்பட்டன. தீப்தி வழங்கிய நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.