ராசிபுரம் அருகே புதிய மினி பேருந்து துவக்கி வைத்து பேருந்தில் பயணம் செய்த எம்பி ராஜேஷ்குமார்...

ராசிபுரம் அருகே புதிய மினி பேருந்து துவக்கி வைத்து பேருந்தில் பயணம் செய்த எம்பி ராஜேஷ்குமார்...;

Update: 2026-01-18 15:43 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகம் முனியப்பம் பாளையம் உள்ளது இங்கு 800க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதிக்கு பேருந்து வசதி இல்லை என மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ் குமாரிடம் அப்பகுதி கூறிவந்தனர். தொடர்ந்து பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ராசிபுரத் திலிருந்து காகாவேரி முத்தாயம்மாள் அறிவியல் கல்லூரி பூசாரிபாளையம், குச்சிகாடு, , வடுகம் வழியாக முனியப்பம் பாளையம் , சீராப்பள்ளி, நாமகிரிபேட்டை பேட்டைக்கு செல்ல புதிய தனியார் மினி பேருந்தை ஏற்பாடு செய்து வழி தடத்தை உருவாக்கி கொடியசைத்து பேருந்தை எம்பி தொடங்கி வைத்தார். பின்னர் புதிய மினி பேருந்தில் அமர்ந்து அனைவருக்கும் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பேருந்நில் பயணம் செய்தார். இந்த நிகழ்வில் ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழக செயலாளர் கே.பி. ராமசாமி, மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகி சௌந்தர்ராஜன் , மேலும் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் உடனிருந்தனர்...

Similar News