நங்கவரம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
இரண்டு பைக்குகள் பறிமுதல்;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி நடைப்பாலம் பகுதியில் நேற்று சட்டவிரோதமாக பணம் வைத்து தாயம் விளையாடியுள்ளனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட அரவிந்தன், மனோகர், கருணாகரன், விவேக், சுந்தர் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் இரண்டு இரு சக்கர மோட்டார் வாகனங்கள், ரொக்க பணம் ரூ.21020 பறிமுதல் செய்தனர்.