நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா
குமாரபாளையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது;
குமாரபாளையம் குள்ளங்காடு பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் கவிதை போட்டி, மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, மற்றும் வினாடி வினா போட்டிகள் வைக்கப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மட்டும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சமூக ஆர்வலர்கள் சௌடேஸ்வரி மற்றும் ஜமுனா ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு விளக்கமாக கூறினார்கள். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மகாலட்சுமி,தீனா,சசி,தினேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.