ஜாக்கி உதவியுடன் 1½ அடி உயர்த்தப்பட்ட ஆலயம்!

சாத்தான்குளத்தில் ஜாக்கி உதவியுடன் ஜெபஞானபுரம் ஜெப ஆலயம் முதற்கட்டமாக ஒன்றரை அடி இன்று உயர்த்தப்பட்டது.

Update: 2024-09-15 05:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜாக்கி உதவியுடன் ஜெபஞானபுரம் ஜெப ஆலயம் முதற்கட்டமாக ஒன்றரை அடி இன்று உயர்த்தப்பட்டது. சாத்தான்குளம் ஜெபஞானபுரத்தில் ஜெபஆலயம் எனும் சிற்றாலயம் உள்ளது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டத்திற்கு பாத்தியப்பட்ட இவ்வாலயம் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் தினமும் ஜெப ஆராதனை நடந்த வருகிறது. மேலும் ஆண்டு தோறும் பிரதிஷ்டை அசன வைபவமும் நடந்து வருகிறது. இந்த ஆலயம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும், அப்பகுதியில் சாலையை உயர்த்தி அமைக்கப்பட்டு வந்த நிலையினாலும் இந்த ஆலயத்தை அடிப்பகுதி தாழ்ந்து போனது. இதனால் சிறிது மழை பெய்தாலும் ஆலயத்திற்குள் தண்ணீர் புகுந்து வந்தது. இதனால் ஆலய நிர்வாகத்தினர் ஆல.யத்தை இடித்து புதுப்பிக்காமல், புது முயற்சியாக ஆலயத்தின் பழமை மாறாமல் தண்ணீர் புகுவதை தடுக்கும் வகையில் ஜாக்கி உதவியுடன் ஆலயத்தை அடி பகுதியை சமார் 3அடி உயர்¢த்திட முடிவு செய்தனர். அதன்படி சென்னை சன் பில்டிங் லிப்டிங் சர்வீஸ் கம்பெனியை நாடினர். அந்நிறுவன பொறியாளர் சுந்தரமூர்த்தி ஆலயத்தை பார்வையிட்டு ஜாக்கி உதவியுடன் ஆலயத்தை அடிப்பகுதியை 3 அடி உயர்த்திடும் பணியானது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்பணியில் பொறியாளர் ஆலோசனையின் பேரில் 25க்கு மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர். முதற்கட்டமாக ஆலய அடிப்பகுதி இடிக்கப்பட்டு ஆலயத்தை சுற்றி 100க்கு மேற்பட்ட ஜாக்கிகள் பொறுத்தப்பட்டு அதன்பிடியில் ஆலயம் கட்டடம் இருக்கும் பணி செய்யப்பட்டன. இதனையடுத்து முதறகட்டமாக ஆலய கட்டடத்தை ஒன்றரை அடி உயர்த்தும் பணி இன்று சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இப்பணியை சாத்தான்குளம் சேகர குருவானவர் டேவிட் ஞானையா ஜெபித்து தொடங்கி வைத்தார். இதில் திருமண்டல உறுப்பினர் குணசீலன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜோசப், சாத்தான்குளம் சேகர நிர்வாகிகள் கிருபாகரன், சசிகரன், உடற்கல்வி ஆசிரியர் நெல்சன், வழக்குரைஞர் தியோனிஸ், முன்னாள் சேகர குருவானவர் செல்வன் மகாராஜாஉள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக சாத்தான்குளத்தில் முதன்முறையாக ஜாக்கி உதவியுடன் ஆலய கட்டடம் உயர்த்தப்பட உள்ளதை அறிந்து சபை மக்கள் மற்றம் ஊர் மக்கள் பலர் வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் ஆலயத்தை சுற்றி அமர்ந்து ஜாக்கி உதவியுடன் ஆலய கட்டிடத்தை ஒன்றரை அடி உயர்த்தும் பணியில் ஈடுப்பட்டனர். ஒன்றரை அடி உயர்த்தப்பட்டதும், வரும் நானில் மீதமுள்ள ஒன்றரை அடி உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Similar News