மார்ச் 1ல் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த தினத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்:-;

Update: 2025-03-05 17:42 GMT
. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் பிறந்த தினமான மார்ச் 1ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பூம்புகார் எம்எல்ஏவும் திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா எம்.முருகன் வழங்கி பரிசு பெட்டகத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் 500 நபர்களுக்கு மதிய உணவினை அவர் வழங்கினார். இதில் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News