நாய் கடித்து சிறுமிகள் உள்பட 10 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நாய் கடித்து சிறுமிகள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.;
மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் கடந்த சில நாள்களாக நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இந்நிலையில் இங்குள்ள வீதிகளில் சுற்றித்திரிந்த நாய்கள் நடந்து வந்தவா்களை கடித்தது. இதில் சிறுமிகள் உள்பட 10 போ் காயமடைந்தனா். இவா்கள் முத்தனேந்தல், மானாமதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா். பலத்த காயமடைந்தவா்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ராஜகம்பீரத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனா். கடந்த சில வாரங்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோா் நாய் கடிக்கு ஆளாகியுள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட அரசு துறை நிா்வாகம் இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.