சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு;

Update: 2025-02-28 09:02 GMT
சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் ராஜகணேஷ் (வயது 24), கூலித்தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியுடன் பழகி உள்ளார். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அவருடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ராஜகணேசை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ராஜகணேசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

Similar News