விநாயகர் சதுர்த்தி: 10ஆயிரம் பேருக்கு அன்னதானம்
தூத்துக்குடியில் போத்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா முன்னிட்டு மறைந்த திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி திடலில் சுமார் 10ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.;
தூத்துக்குடியில் போத்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா முன்னிட்டு மறைந்த திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி திடலில் சுமார் 10ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை போத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் சிறப்பு அலங்காரம், மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மறைந்த திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி திடலில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு அந்த பந்தலில் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தலை வாழை விரித்து பொறியல், காய்கறிக் கூட்டு, சாம்பார், ரசம், பாயாசம், அப்பளம், கேசரி உள்ளிட்ட உணவு வகைகள் அடங்கிய அறுசுவை உணவு பரிமாறினர் . காலை 10.30 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த அன்னதானம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் இந்து, கிறிஸ்துவர்கள், முஸ்லிம், மற்றும் ஏழை பணக்காரன் என எந்த ஒரு பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமமாக அமர்ந்து உணவு அருந்தினர்.