தலைக்கவசம் அணிவதன் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி - 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தலைக்கவசம் அணிவதன் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Update: 2023-12-16 15:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகரில் நேரு யுவகேந்திரா, வேர்ல்டு விஷன் இந்தியா மற்றும் ரோட்டரி கிளப் விருதுநகர் கிங்டம் சார்பாக தலைவர் வரதராஜ், துணை ஆளுநர் ஜாகிர் உசேன் தலைமையில் தலைக்கவசம் அணிவதன் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு அவசியம் குறித்து நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இந்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, தலைக்கவசம் உயிர் கவசம், படியில் பயணம் நொடியில் மரணம் , பெண்கள் ஆபத்து எனில் எங்கேயும் எப்போதும் அவசர உதவிக்கு 181 அழைக்கவும், குழந்தைகள் சத்துக்கள் நிறைந்த உணவை பருகவேண்டும், உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி இந்த பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம்,

உழவர் சந்தை மதுரை ரோடு, மெயின்பஜார், தெப்பம், கருமாதி மடம், புதிய பேருந்து நிலையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று சூலக்கரை காவல்நிலையத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த நிகழ்வின் முடிவின் போது 10 போக்குவரத்து காவல்துறைக்கு ஒளிரும் மின்விளக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News