மலை கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் – மகிழ்ச்சி அடைந்த பழங்குடியின மக்கள்!
பூலப்பதி பழங்குடியின கிராமத்தில் 100 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத நிலையில், மின்சாரம் வழங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.;
மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பூலப்பதி பழங்குடியின கிராமத்தில் 100 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத நிலையில், 21 இருளர் இனக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை முன்னிட்டு எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் சட்டமன்றத்தில் விசாரணை செய்ததையடுத்து, ரூ.70 லட்சம் மதிப்பில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் ஒப்புதல் பெற்றது. இதற்கான தொடக்க விழா மற்றும் பூமிபூஜை இன்று செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மின்துறை உயர் அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீண்டகால போராட்டத்திற்கு பிறகு மின்சாரம் கிடைக்கும் நிலையில், கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.