சூலூரில் 1000 ஆண்டு பழமையான திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் புரட்டாசித் தேரோட்டம் கோலாகலம்!
பல்லாயிரம் பக்தர்கள் திரண்ட தேர்த்திருவிழா – சூலூர் நகரம் விழாக்கோலம்!;
கோவை மாவட்டம் சூலூரில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டு பழமையான சோழர் காலத்து அருள்மிகு திருவேங்கடநாதப் பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதத் தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கம்பீரமாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. ஸ்ரீதேவி, பூதேவியுடன் வண்ணமயமான அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளினர். அரகோ கோஷம் முழங்க பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து பக்திப் பரவசத்தில் கலந்து கொண்டனர். கோவில் சிறப்பாக துளசி தீர்த்தத்துடன் மிளகு பிரசாதமும் வழங்கப்பட்டது. சூலூர் நகரம் முழுவதும் விழாக்கோலத்துடன் ஆனந்த நிறைந்த சூழல் நிலவியது.