பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 102 வது பிறந்த நாள் திமுக வெண்ணந்தூர் ஒன்றியத்தின் நலத்திட்ட உதவி
பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 102 வது பிறந்த நாள் திமுக வெண்ணந்தூர் ஒன்றியத்தின் நலத்திட்ட உதவி
பேராசிரியர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு வெண்ணந்தூர் ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அலவாய்பட்டி ஊராட்சியில் ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றியக்குழு உறுப்பினருமான RM.துரைசாமி அவர்கள் தலைமையில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் AR.துரைசாமி மதிமுக வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோரின் முன்னிலையில் பேராசிரியர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதனையடுத்து அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் வெண்ணந்தூர் ஒன்றிய கழக பொருளாளர் பாலு, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கௌரி வெங்கடாசலம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பிரபு, ராசிபுரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரவீந்தர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அருள்முருகன், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார், அலவாய்ப்பட்டி ஊராட்சி கிளைக் கழக செயலாளர்கள் முனுசாமி, சிதம்பரம், மாரியப்பன், வேலு, குணசேகரன், தனசேகரன், அசோக், மாதேஸ்வரன், சிவா, மின்னக்கல் ரகுபதி, அத்தனூர் அருண்குமார், சஞ்சய், அன்பு டிஜிட்டல் சீனிவாசன், குமரன் பைனான்ஸ் சரவணகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.