
தேனி நகராட்சியில் கடந்தாண்டு பல்வேறு வரிகள், வாடகை பாக்கி என மொத்தம் ரூ.12.26 கோடி வசூல் நிலுவையில் இருந்தது. இதில் ரூ.10.40 கோடியை மார்ச் இறுதிக்குள் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வரை ரூ.10.58 கோடி வசூலிக்கப்பட்டு நூறு சதவீத வரி வசூல் இலக்கை எட்டியுள்ளதாகவும், மீதமுள்ள தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.