சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 1.06 கோடி

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ. 1. 06 கோடி காணிக்கை வந்தது புதன்கிழமை தெரியவந்தது.;

Update: 2025-04-10 02:49 GMT
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த மாா்ச் 26 ஆம் தேதி உண்டியல் காணிக்கை நடைபெற்ற நிலையில், புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ. இரா. பிரகாஷ், அறங்காவலா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் அலுவலா்கள், பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். முடிவில் முதன்மை திருக்கோயில் உண்டியல்களிலிருந்து ரூ. 1 கோடியே 06 லட்சத்து 78ஆயிரத்து 777, தங்கம் 1 கிலோ 290 கிராம், வெள்ளி 3 கிலோ 960 கிராம், 165 வெளிநாட்டு பணத்தாள்கள், 1185 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

Similar News