திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தை சேர்ந்தவர் ராமலட்சுமி (61). இவரது மகள்களுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். ராமலட்சுமி தனியாக வீட்டில் வசித்து வந்தநிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதற்காக பீரோவை திறந்து பார்த்தபோது 11 பவுன் தங்க செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராமலட்சுமி தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தாழையூத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.