குமரி மாவட்டம் குளச்சல் செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் ரீட்டா பாய் (71). இவரை கடந்த 2012 ஏப்ரல் 7-ம் தேதி ஸ்டீபன் ஜெயக்குமார் (42) என்பவர் வீட்டை உடைத்து சேதப்படுத்தி கையில் இருந்த அறிவாளால் மூதாட்டியை வெட்டினார். குளச்சல் போலீசார் ஸ்டீபன் ஜெயபால் மீது வழக்கு பதிவு செய்தனர். இரணியல் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் ஸ்டீபன் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து பின்னர் வெளிநாட்டு தப்பி சென்று விட்டார். 13 வருட காலமாக தலைமறைவாக இருந்த ஸ்டீபன் ஜெயபால் கடந்த 7ம் தேதி மும்பை விமான நிலையம் வந்தார். அப்போது விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நேற்று இரணியல் கோர்ட்டில் ஆதரப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.